ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.21-
பினாங்கு, ஜார்ஜ்டவுன் நகரின் பரபரப்பான ஜாலான் பர்மாவில் திடீரென ஒரு பெரும் பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து முடக்கம் கண்டது. இந்தப் பள்ளம், புதைகுழி போல் உருவானதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பே இந்தப் பள்ளம் உருவாகக் காரணம் என்று பினாங்கு மாநில ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் H’ng Mooi Lye உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், ஜாலான் பினாங்கில் இருந்து ஜாலான் பர்மாவுக்குச் செல்லும் இரு வழிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தை வேறு பாதைகளுக்கு மாற்றியமைக்கும் பணியில் காவற்படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.








