Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மனைவியை அடித்த குற்றத்திற்காக ஓராண்டு சிறை
தற்போதைய செய்திகள்

மனைவியை அடித்த குற்றத்திற்காக ஓராண்டு சிறை

Share:

தனது மனைவியை அடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு தம்பின் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறைத்தண்டனையும், ஆயிரம் வெள்ளி அபராதமும் விதித்தது.

ஏற்கனவே இதேபோன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்தரவான அந்த நபரின் முந்தைய குற்றத்தை கருத்தில் கொண்டு கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

46 வயது எஸ். ரகுபாலன் என்று அந்த ஆடவர், கடந்த ஏப்ரல 24 ஆம் தேதி காலை 9.15 மணியளவில் கெமாஸ்,தாமான் மொலெக்கில் 41 வயதுடைய தமது மனைவியை கண்மூடித்தனமாக தாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தமது மனைவியை அடித்த குற்றத்திற்காக ரகுபாலனுக்கு நீதிமன்றம் ஒரு நாள் சிறைத் தண்டனையும், 1,500 வெள்ளி அபராதமும் விதித்தது.

சிறைத் தண்டனைக்கு பிறகு அந்நபர் அதே குற்றத்தை மீண்டும் புரிந்ததால் சிறைத் தண்டனை 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் கார்த்தினி கஸ்ரான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News