மலேசிய இந்திய சமூகத்திற்கு மற்றொரு அரசியல் கட்சி அவசியமாகிறது என்று பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய சமுதாயத்திற்காக பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால், அவற்றை குறை கூற எதுவுமில்லை. அத்தகைய அரசியல் கட்சிகளை நட்புக்கட்சிகளாகவே தாம் பார்ப்பதாக டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
ஆனால், அவை மற்ற கூட்டணிகளுக்கு கட்டுப்பட்ட கட்சிகளாக இருப்பதால் பல சந்தர்ப்பங்களில் நினைத்ததைத் பேசவும், நினைத்தபடி செயல்படவும் முடிவதில்லை.
ஆனால், தமது தலைமையில் அமையவிருக்கும் உரிமை என்ற அரசியல் கட்சியின் நிலைப்பாடு அப்படி அல்ல. அது முழு சுதந்திரத்துடன் யாருக்கும் கட்டுப்படாமல் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பட்டு செயல்பட முனைகிறது.
மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு இந்தியர்களுக்கு மற்றொரு புதிய அரசியல் கட்சி அவசியமே என்று ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் டாக்டர் இராமசாமி இதனை குறிப்பிட்டுள்ளார்.








