கோலாலம்பூர், அக்டோபர்.24-
தனது பத்து வயது மகளைப் பாராங்கினால் தாக்கி, காயம் விளைவித்ததாக தந்தை ஒருவர் கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
நீதிபதி டாக்டர் அஸ்ரோல் அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்ட 49 வயது கே. வேஜேஷ் என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 29 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
கடந்த அக்டேபார் 22 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் கோலாலம்பூர், வங்சா மாஜூ, ஸ்தாப்பாக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் கே. வேஜேஷ் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








