Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக அரிய மண் தோண்டப்பட்ட விவகாரம் அவர்களுக்கு தெரியும்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக அரிய மண் தோண்டப்பட்ட விவகாரம் அவர்களுக்கு தெரியும்

Share:

கெடா, சிக், புக்கிட் எங்காங் பகுதியில் அரிய கனிமவள மண் களவாடப்பட்ட விவகாரம், கெடா மந்திரி புசார் வாரியத்திற்கு நன்கு தெரியும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். அந்த அரிய மண் தோண்டும் நடவடிக்கையில் அதிகாரத் துஷ்பிரயோகமும், முறைகேடும் நடந்து இருப்பது தமக்கு தெரியாது என்றும் அதில் தாம் சம்பந்தப்படவில்லை என்றும் கெடா மாநில சட்டமன்றக்கூட்டத்தில் மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நோர் கூறியிருப்பதாக சைபுடீன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மந்திரி புசார் வாரியத்தில் வேலை செய்த ​சீன நாட்டைச் சேர்ந்த கும்பல் ஒன்று இந்த அரிய மண் களவாடல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது மந்திரி பெசார் வாரியத்திற்கு நன்கு தெரியும் என்று சைபுடீன் விளக்கினார்.

அரிய மண் களவாடப்பட்ட விவகாரத்தில் மந்திரி புசார் வாரியத்தை சேர்ந்த தலைமை செய​ல்முறை அதிகாரி மற்றும் நிறுவனம் ஒன்றின் பெண் இயக்குந​ர் கைது செய்யப்பட்டு இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எச்பிஆர்எம் நேற்று அறிவித்துள்ளது.

Related News