Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தீர்ப்பை அப்பீல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
தற்போதைய செய்திகள்

தீர்ப்பை அப்பீல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

Share:

சரவாவில் ஒரு ஹோட்டலை கொள்முதல் செய்ததில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 6 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு கோடியே 54 லட்சம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்ட ஃபெல்டா முன்னாள் தலைவர் முஹமாட் இஸா அப்துல் சாமாட், தமக்கு எதிரான தண்டனையை எதிர்த்து செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கான தேதியை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்ற பதிவதிகாரி தெரியப்படுத்துவார் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி வசீர் ஆலாம் மைடின் மீரா தெரிவித்தார்.

முஹமாட் இஸா விற்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை நிருபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றி கண்டுள்ளதாக கூறி, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி அந்த முன்னாள் மந்திரி புசாருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி முஹமாட் நஸ்லான் முஹமாட் கசாலி, சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்தார்.

Related News