Oct 16, 2026
Thisaigal NewsYouTube

GV பிரகாஷின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
GV பிரகாஷின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

டிச. 8-

மலேசிய பொழுதுபோக்குத் துறையில் உயர்ந்த தரத்தில் நிகழ்ச்சிகளைப் படைத்து வருகின்ற DMY Creations ஏற்பாட்டில்பிரபல இந்திய இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகக் கலைஞராக வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் GV PRAKASH CELEBRATION OF LIFE இசை நிகழ்ச்சி நேற்று புக்கிட் ஜாலில் ஹாக்கி அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தியாவைத் தவிர்த்து வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஜி. வி. பிரகாஷின் முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும்.

தன்னுடைய 38 சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து இசைநிகழ்ச்சி படைத்தது மட்டும் இல்லாமல் அதில் சில பாடல்களை நேரலையாக முதல் முறையாக பேடையில் பாடியும் அசத்தி இருக்கிறார். பல முறை மலேசியா வந்துள்ளதகக் குறிப்பிடும் ஜி. வி. பிரகாஷ், இந்நாடு எப்போதுமே தனக்கும் தன் குழுவுக்கும் இரண்டாவது வீடு போன்றது எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு மலேசியாவில் நடைபெறும் ஆகக் கடைசியான பெரிய நிகழ்ச்சி என்பதால், பல இசைக் கலைஞர்களை நேரடியாகக் காணும் வாய்ப்பை தவற விட்டு விடக் கூடாது என்பதறற்காக, புக்கிட் ஜலிலில் ஹாக்கி அரங்கில் 75,000-க்கும் அதிகமான இரசிகர்கள் திரண்டு நிகழ்ச்சிக்கு மேலும் உற்சாகமூட்டினர்.

சைந்தவியுடன் இணைந்து தமிழ்நாட்டின் முன்னணி பாடகர்கள் Haricharan, Tippu, Diwakar, Anand Aravindakshan, Anthony Dasan, Haripriya, Nithyashree, Stefany Vatz. ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இதே நிகழ்ச்சியில் மலேசிய ஹிப்-ஹாப் கலைஞர் Yogi – B, சமீபத்தில் இந்தியாவின் சா ரி க ம ப சீனியர்ஸ் நிகழ்ச்சியில் தனது மிகச் சிறந்த திறமையை வெளிக்காட்டி அனைவரது மனதையும் கவர்ந்த அருணினி அஷ்வீனா ஆகியோரும் இணைந்தனர். .

வழக்க்கமான இசை நிகழ்ச்சியாக இல்லாமல் பன் மடங்கு அற்புதமான அனுபவத்தை வந்திருந்த இரசிகர்கள் அனுபவித்தார்கள். நெருப்பைப் போல மேடையை ஒளிரச் செய்த இசைப் பயணத்தை DMYவழங்கியதில் பெருமை கொள்வதாக டத்தோ முகம்மட் யூசோஃப் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த DMY CREATIONSஇன் உரிமையாளர் டத்டொ முஹம்மட் யூசோஃப்க்கு GV PRAKASH தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →