Aug 6, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாவது நாளாக வாகனப் போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

இரண்டாவது நாளாக வாகனப் போக்குவரத்து நெரிசல்

Share:

கோலாலம்பூர், டிச. 23-


நாளை கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை , பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் என தொடரவிருக்கும் விடுமுறையையொட்டி மலேசிய நெடுஞ்சாலைகளில் இன்று இரண்டாவது நாளாக வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நேற்று டிசம்பர் 23 ஆம் தேதியும், இன்று 24 ஆம் தேதியும் பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் இலவசம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக அதிகமான வாகனங்கள் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை மற்றும் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் காண முடிகிறது.

நேற்று தொடங்கி, அடுத்த சில தினங்களுக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை நாள் ஒன்றுக்கு சராசரி 21 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Related News