Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முஸ்லிம் அல்லாதவர்கள் நிகழ்வுகள் ? அமைச்சர் டாக்டர் முகமட் நாயிம் மொக்தாருடன் சந்திப்பு நடத்தப்படும்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.6-

முல்லீம் அல்லாதோரின் நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது தொடர்பில் புதிய வழிகாட்டல் விதிமுறைகள் தயாராகி வருவதாக அறிவித்துள்ள பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தாருடன் ஒரு சந்திப்பு நடத்தப்படும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்சான் ஜோஹான் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விதிமுறைகள் குறித்து தாம் கவலை கொள்வதாக அந்த DAP எம்.பி. குறிப்பிட்டுள்ளார். JAKIM- மின் அந்த புதிய வழிகாட்டல் விதிமுறைகள், இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டுத் தலங்களில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிளுக்கு மக்களால் தேந்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய பிரதிநிதிகளை அழைக்கும் விவகாரத்தில் எதிர்மறையான தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று ஷாரெட்சான் ஜோஹான் கவலை தெரிவித்தார்.

தங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய அல்லாத வழிபாட்டுத்தலங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார்கள் என்றால் அங்கே சமய வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக அல்ல.

மாறாக, தன்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த முஸ்லிம் அல்லாத வாக்காளர்களுக்கு கடமையாற்றவும், அவர்களின் மகிழ்வில் இரண்டறக் கலக்கவும், அவர்களின் குறைகளை கேட்டறியவும், நிதி உதவி வழங்கவும் செல்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஷாரெட்சான் ஜோஹான் வலியுறுத்தினார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து