Oct 1, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் மாநில அரசு அறிவித்தது 640 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 2026 பட்ஜெட்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் மாநில அரசு அறிவித்தது 640 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 2026 பட்ஜெட்

சிரம்பான், டிசம்பர்.11-

நெகிரி செம்பிலான் சட்டமன்றம், மாநிலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான 640 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள பட்ஜெட்டை இன்று அங்கீகரித்தது.

மடானி மக்களின் நல்வாழ்வு பட்ஜெட் என்ற கருப்பொருளைக் கொண்ட 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், 150 மில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுக்கான செலவினங்களையும் சேர்த்து 640 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மதிப்பிடப்பட்ட வருவாய் 610 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும் போது, 30 மில்லியன் ரிங்கிட் பற்றாக்குறை பட்ஜெட்டாகும்.

இந்தப் பட்ஜெட், வாழ்க்கைத் தேவைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்தவும், மீட்சித்தன்மையைக் கொண்டு வரவும் உதவும் என்று நம்பப்படும் 69 திட்டங்களை உள்ளடக்கிய ஒன்பது துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →