Jul 6, 2026
Thisaigal NewsYouTube
உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு கூடுதல் உதவி
தற்போதைய செய்திகள்

உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு கூடுதல் உதவி

Share:

கோலாலம்பூர், ஜூன்.11-

பேரா, கெரிக் பேருந்து விபத்தில் உயிரிழந்த உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்களின் குடும்பங்களுக்கு கூடுதல் நிதி உதவியாக தலா 10 ஆயிரம் ரிங்கிட்டை அரசாங்கம் வழங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதே போன்று காயமுற்ற மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் தனது முக நூலில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தங்களுக்கு ஏற்பட்ட துயரிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்குப் போதுமான மனவலிமையை இறைவன் வழங்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News