Dec 3, 2025
Thisaigal NewsYouTube
2026 சுற்றுலா ஆண்டை சிறக்கச் செய்யவே வருமான வரி விலக்களிப்பு
தற்போதைய செய்திகள்

2026 சுற்றுலா ஆண்டை சிறக்கச் செய்யவே வருமான வரி விலக்களிப்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.14-

2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுப் பயணிகளை ஊக்கவிக்கும் பொருட்டு பல்வேறு சலுகைத் திட்டங்களை அரசாங்கம் வழங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று, உள்ளுர் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அத்தகையப் பயணத்தை மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் சிறப்பு வருமான வரி விலக்களிப்பு சலுகையை வழங்கவிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாம் தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்ளூர் சுற்றுலாவிற்கு மலேசியர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் வரை வருமான வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மலேசியர்கள் பெரும்பாலும் தாய்லாந்து, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்ள விரும்புகின்றனர். அவர்களின் கவன ஈர்ப்பை இது போன்ற சலுகைகளின் வாயிலாக உள்ளூர் சுற்றுலாவிற்குத் திசை திருப்புவது மூலம் மலேசிய ரிங்கிட்டை வலுப்படுத்த முடியும் என்று நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News