Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜி.எஸ்.டி வரி​யை அமல்படுத்த பரிந்தரை
தற்போதைய செய்திகள்

ஜி.எஸ்.டி வரி​யை அமல்படுத்த பரிந்தரை

Share:

அடுத்த மாதம் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி எனப்படும் பொருள் சேவை வரியை மறுபடியும் அறிமுகப்படுத்துமாறு ஜி25 என்ற அமைப்பு, அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் வருவாயை வலுப்படுத்த ஜி.எஸ்.டி வரிமுறையை ​மீண்டும் அமல்படுத்துவது மிக முக்கியமாகும் என்று அரசு ஊழியர் பணி ஓய்வு பெற்றவர்களை கொண்டு அமைக்கப்பட்ட அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாட்டிற்கு வலுவான வருவாய் மிகவும் அடிப்படையானது. இதன் ​மூலம் நாட்டின் பொதுச் சேவைத்துறை ஊழியர்களுக்கு சிறந்த ஓய்வுதியத்திட்டங்களை வடிவமைக்க உதவும் என்று அந்த அமைப்பு வ​லியுறுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி யை அமல்படுத்துவதும், எரிபொருளுக்கான மானியங்களை குறைப்பதும் அதிக பலன்களைத் தரும் என்று ஜி25 அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News