Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இன்று அதிகாலை பிறை நோக்கிச் செல்லும் வழியில் இரு கார்கள் மோதிய விபத்தில், 45 வயது பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

இவ்விபத்து குறித்து அதிகாலை 3.49 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

பாலத்தின் 1.3 கிலோமீட்டர் பகுதியில் விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் கிடைத்ததையடுத்து, மீட்புக் குழுவினர் அதிகாலை 4.02 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்தபோது, டொயோட்டா ஹைலெக்ஸ் வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் பெண் ஒருவர் சிக்கியிருந்தார்.

அப்பெண்ணின் தலை, கால்கள் மற்றும் கைகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் அப்பெண்ணை மீட்ட தீயணைப்பு வீரர்களை அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது