Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

கோலாலம்பூர், ஜாலான் கூச்சிங் பகுதியில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஆறு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஐந்து வயது சிறுமி அசியா அஹ்மாட் ஷாஹிர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வங்கி அதிகாரியான 24 வயது ராவின் கோ மீது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று, மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தனது மின்சார வாகனத்தைப் பொறுப்பற்ற முறையில் ஓட்டி சிறுமியின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)-இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 5,000 முதல் 20 ஆயிரம் ரிங்கிட் வரையில் அபராதமும் விதிக்கப்படலாம்.

அதேவேளையில், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படலாம்.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் மேல் விசாரணை கோரினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது