ஜோகூர் மாநிலம், யோங் பெங் பகுதியில் உள்ள பள்ளி மண்டபத்தில், ஐரின் சோஃபியா கைருல் ஃபைசால் என்ற 16 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 16 வயதுடைய நான்காம் படிவ மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட போது, அந்த மாணவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.
மேலும், கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ், அவருக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும், சிறைத்தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.








