Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

இம்மாதத் தொடக்கத்தில் சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பாதையில் நடைபெற்ற ஃபோர்முலா 1 பந்தயம் மூலம், மலேசியாவுக்கு சுமார் 950 மில்லியன் ரிங்கிட் பொருளாதாரப் பலன் கிடைத்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை நடைபெற்ற இப்பந்தயத்தைக் காண, வார இறுதி நாட்களில் சுமார் 2 லட்சத்து 61 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்ததாகவும், அவர்களில் இறுதி பந்தய நாளில் மட்டும் சுமார் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஃபோர்முலா 1 நிர்வாகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்ட இப்போட்டியை 827 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 97 ஆயிரத்திற்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதுடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், சுமார் 5,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களும் இப்பந்தயத்தை முன்னிட்டு மலேசியாவுக்கு வந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று பத்தாங் சாடோங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோடியா சாப்பி எழுப்பிய கேள்விக்கு அமைச்சு எழுத்துப் பூர்வ பதிலளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது