40 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் குடியிருந்து வரும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு, மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை எதிர்த்து, ரவாங், கம்போங் கொஸ்கான் தம்பாஹானைச் சேர்ந்த 12 குடும்பங்கள் இன்று ஷா ஆலாமில் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பாட்டனர்.
மேம்பாட்டு நிறுவனத்துடன் தாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி, இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் வரை, தாங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்று மந்திரி பெசார் உத்தரவிட வேண்டுமென்று அந்த 12 குடும்பத்தினரும் பல்வேறு பதாகைகளை ஏந்திய வண்ணம் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மலேசிய சோஷலீச கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தலைமையேற்றார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


