ஜசெக கட்சியைப் பிரதிநிதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என அக்கட்சியின் பொது செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.
மக்களால் நம்பிக்கைகுரியவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜசெக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் கடமைகளைச் செய்ய தவறினால், அவர்களின் இடம் வேறொருவரால் நிரப்பப்படும் என அந்தோணி லோக் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கட்சி நிர்ணியத்துள்ள அனைத்து கட்டமைகளையும் தலைவர்கள் செய்து முடிக்க வேண்டும். அதோடு அவர்களைன் அனைத்து நடவடிக்கைகளையும் ஜசெக கட்சி கண்காணித்து அவர்களுக்கு மதிப்புகள் வழங்கி கொண்டிருப்பதால் ஜசெக கட்சி தலைவர்கள் மக்களுக்காக அயராது உழைக்க வேண்டும் என அந்தோணி வலியுறுத்தினார்.







