காஜாங், செப்டம்பர்.06-
அண்மையில் காஜாங்கில் மூன்று மாடி பங்களா வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனது தொடர்பில் கைது செய்யப்பட்ட உயர் போலீஸ் அதிகாரி மற்றும் போலீஸ்காரர்கள் தொடர்பில் எஸ்ஓபி நடைமுறை பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அந்த போலீஸ் உயர் அதிகாரி மற்றும் போலீஸ்காரர்கள் விசாரணைக்குப் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஹோம் ஸ்டேய் வீடாகப் பயன்படுத்தப்படும் அந்த பங்களா வீட்டில் சோதனை என்ற பேரில் போலீஸ் குழு ஒன்று, வீட்டின் பொருட்களை அலசி ஆராய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அலங்கோலமாகக் கிடந்த தனது பங்களா வீட்டின் பொருட்களைச் சரிப் பார்த்ததில் பல்லாயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை என்று அதன் உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஓர் உயர் போலீஸ் அதிகாரி மற்றும் சில போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.








