Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் புக்கிட் அமான் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவு இயக்குநராகப் பதவி உயர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் புக்கிட் அமான் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவு இயக்குநராகப் பதவி உயர்வு

கோலாலம்பூர், ஜூன்.20-

அரச மலேசியப் போலீஸ் படையின் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் பதவி ஓய்வு பெறுவதையொட்டி, புதிய ஐஜிபி நியமிக்கப்படவிருக்கும் வேளையில் போலீஸ் படையில் எட்டு முதிர்நிலை உயர் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநராக பதவி அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளார்.

பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நன்னெறிப் பிரிவின் இயக்குநராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஃபிசோல் சால்லே, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குப் பிரிவின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் செயலாளர் டத்தோ கமாருல்ஸாமான் அப்துல்லா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →