ஈப்போ, நவம்பர்.01-
நேற்று வெள்ளிக்கிழமை மாலை, தாப்பா, செண்டேரியாங்கில் உள்ள லத்தா கிஞ்சாங் நீர் வீழ்ச்சியில் குளித்த போது 33 வயது ஆடவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நேற்று மாலை நீர் வீழ்ச்சியின் மேல் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சோதனைச் சாவடி 12-இல், அந்த ஆடவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக, பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா தெரிவித்துள்ளார்.
நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, அந்த ஆடவர் கால் இடறி நீரில் விழுந்ததாக பாதிக்கப்பட்டவரின் நண்பர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்துள்ளனர்.
என்றாலும், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டதாக முகமட் ஹனஃபியா தெரிவித்துள்ளார்.








