ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்துள்ள 19 கட்சிகளும், அடுத்த பொது தேர்தல் நடைபெறும் வரும்வரை அந்த அரசாங்கத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என அம்னோ கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும் துணை நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, பாஸ் கட்சி மற்றும் அம்னோ இணைந்து செயல்பட்ட முவாஃபாகாட் நேஷனல் கூட்டணி தோல்வி கண்ட சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில், சபா சரவாக் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் ர முவாஃபாகாட் நேஷனல் மலாய்காரர்கள் ஒற்றுமை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட்டதால் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது எனஅமாட் மஸ்லான் தெரிவித்தார்.







