கோலாலம்பூர், அக்டோபர்.02-
அரிய மண் தாதுக்களை பதப்படுத்தும் திட்டத்திற்கான ஆரம்பக் கட்டப் பேச்சு வார்த்தைகளில் சீனாவும் மலேசியாவும் ஈடுபட்டுள்ளன.
தென்கிழக்கு ஆசியாவில் இந்த பிரம்மாண்ட சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவ சீன அரசு நிறுவனத்துடன், மலேசியாவின் கசானா நேஷனல் கூட்டு சேர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மலேசியாவில் இன்னும் பயன்படுத்தப்படாத Rare Earths வளங்களைப் பெற சீனா தனது தொழில்நுட்பத்தை வழங்கத் தயாராக உள்ளது.
இதன் மூலம், பஹாங்கில் செயல்படுத்தும் ஆலையை அமைத்துள்ள ஆஸ்திரேலிய நிறுவனமான Lynas Rare Earths உடன் போட்டியைக் குறைப்பதே சீனாவின் நோக்கம் என்றும் கூறப்படுகின்றது.








