Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

Share:

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் அதன் விளைவாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அரசுத் துறை மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களான GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணியாற்றும் கொள்கையை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் குழுவின் அவசரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், நாட்டின் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், பொதுமக்களின் பயணச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இப்புதிய பணிமுறை வரும் ஏப்ரல் 15, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்றாலும், நாட்டின் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்ய இது மிகவும் அவசியமானது," என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News