சிலாங்கூர், டெங்கில் பகுதியில் கிராமம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மூன்று மோட்டார் குண்டுகளை போலீஸ் துறையினர் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழித்தனர்.
சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமான் கூறுகையில், கம்போங் டத்தோ அகமது ரசாலியில் வீட்டுக்கு வெளியே இருந்த ரோரோ இரும்புக் கழிவுப் பெட்டியில் உலோகக் கழிவுகளைத் தரம் பிரித்துக் கொண்டிருந்த ஒருவர், நேற்று பிற்பகல் மூன்று சந்தேகத்திற்குரிய பொருட்களைக் கண்டுபிடித்து காவல்துறைக்குப் புகார் அளித்தார்.
போலீஸ் சோதனையில் அவை இரண்டு 60 மில்லிமீட்டர் மற்றும் ஒரு 81 மில்லிமீட்டர் அளவிலான மோட்டார் குண்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
போலீஸ் துறையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் அவற்றை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்று, இன்று காலை சுமார் 9.20 மணியளவில் டெங்கில் திறந்தவெளி கட்டுமானத் தளத்தில் வெடிக்கச் செய்து அழித்தனர்.








