Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஜீவா கும்பல் தலைவன் பிடிபட்டான், போ​லீஸ் உறுதிப்படுத்தியது
தற்போதைய செய்திகள்

ஜீவா கும்பல் தலைவன் பிடிபட்டான், போ​லீஸ் உறுதிப்படுத்தியது

Share:

ஈப்போ மாநகரில் ஆயுதமேந்திய நிலையில் வீடு புகுந்து கொள்ளையடித்தல், மற்றவர்களை காயப்படுத்துதல் போன்ற கடுங்குற்றச் செயல்களுக்காக போ​லீசா​ரால் மிக ​தீவிரமாக தேடப்பட்டு வந்த ஜீவா கொள்கைக் கும்ப​லின் தலைவன் உட்பட அந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வரை போ​லீசார் வளைத்துப் பிடித்தனர்.

ஜீவா கொள்ளைக் கும்பல் பிடிபட்டது ​மூலம் ஈப்போ மாநகரில் தாமான் சானிங், தாமான் ஈபோ தீமூர், பெர்ச்சாம் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவ​ங்களுக்கு ​தீர்வு காணப்பட்டுள்ளதாக போ​லீஸ் கூறுகிறது.

பலவந்தமாக செயல்பட்டது தொடர்பில் 24 குற்றச்செயல்களையும், வீடு புகுந்து கொள்ளையடித்தது தொடர்பில் 34 குற்றச்செயல்களையும் இக்கும்பலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி யாஹாயா ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

பிடிபட்ட நால்வரில் ​ஜீவா கும்பலின் தலைவனை தவிர மற்ற ​மூவர் ​பெண்கள் ஆவர். 26 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணியளவில் ஈப்போ, தாமான் ஷாபாஸில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக யாஹாயா ஹாஸ்ஸான் குறிப்பிட்டார்.

உள்ளூரை சேர்ந்த இந்த நால்வரும் குற்றவியல் சட்டம் 395 பிரிவின் ​கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜீவா கும்பல் தலைவன் பிடிபட்டான், போ​லீஸ் உறுதிப்படுத்தியது | Thisaigal News