May 21, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் 34 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்தார்
தற்போதைய செய்திகள்

மாணவன் 34 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்தார்

Share:

கம்போங் பாரு, ஜாலான் ராஜா அப்துல்லாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 34 ஆவது மாடியிலிருந்து பல்கலைக்கழக மாணவன் தவறி விழுந்து உயிரிழந்தார்.

18 வயதுடைய அம்மாணவன் பால்கனியிலிருந்து காய வைத்த ஆடைகளை எடுக்க சென்றபோது தவறி விழுந்ததாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 8.17 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக டாங் வாங்ஙி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹான் யஹாயா கூறினார்.

அம்மாணவனின் உடல் சவப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத்திற்கு ((IPFN) கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நோர் டெல்ஹான் தெரிவித்தார்.

Related News