Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தற்போது பிரபலமாகி வருகிறது முகாம்கள்
தற்போதைய செய்திகள்

தற்போது பிரபலமாகி வருகிறது முகாம்கள்

Share:

ஆண்டு இறுதியின் விடுமுறை காலம் வந்துவிட்டது. ஹோட்டலில் காணப்படும் வாடிக்கையாளர்களை ஒப்பீடுகையில் தற்போது முகாம்களில் வாடிக்கையாளர்கள் தங்கும் எண்ணிக்கை அதிகமாக காண முடிவதாக மலேசிய முகாம் அகப்பக்கத்தில் தெரியவந்துள்ளது.

தற்போது முகாம் நடவடிக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. வார இறுதி நாட்களில் அதிகமான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துவிடுவார்கள் என்று கேம் அனுகெரா அலாம் மேலாளர் முஹத் முன்சீர் முஸ்தபா கூறினார்.

மலிவான விலை, தேவையான வசதிகள், இயற்கை மிகுந்த சுற்றுச்சூழல் போன்றவற்றினால் அதிகமான சுற்றுப்பயணிகள் முகாம்களில் தங்கி செல்கிறார்கள் என்றார் அவர்.

2023 ஆம் ஆண்டு முடிவதற்குள் இன்னும் அதிக வாடிக்கையாளர்களை எதிர்பார்க்கப்படுவதாக முஹத் முன்சீர் தெரிவித்தார்.

Related News