கோத்தா கினபாலு, டிசம்பர்.16-
சபா மாநிலம் கோத்தா கினபாலுவிலுள்ள வணிக வளாகம் ஒன்றில், சிறுவர்களைக் காலால் எட்டி உதைத்து, தலைகவசத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பாக 30 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.55 மணியளவில், நடந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி, சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அந்நபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் காசீம் மூடா தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் அச்சிறுவர்கள் அனைவரும் மட்ராசா மாணவர்கள் எனத் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் காசீம் மூடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.








