அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.01-
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 3 வயது சிறுமியைக் கொன்று கெடா, லங்காவி, கூனுங் ராயா அருகில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வேலையற்ற நபர் ஒருவருக்கு அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம் இன்று மரணத் தண்டனை விதித்தது.
43 வயது ரம்லான் அப்துல் ரஷிட் என்ற அந்த நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி, லங்காவி மருத்துவமனைப் பணியாளர்கள் குடியிருப்புப் பகுதியில் நூர் அயிஷா அலேயா அப்துல்லா என்ற சிறுமியைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
சிறுமியின் சடலம் வீசப்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட ஒரு மண்டை ஓட்டிலும், இரண்டு பற்களிலும் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் அந்தச் சிறுமியின் மரணத்திற்கானக் காரணத்தை உறுதிச் செய்ய முடியவில்லை என்று தடயவியல் நிபுணர் முன்வைத்த கருத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக நீதிபதி எவாவானி ஃபாரிஸ்தா முகமட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அதே வேளையில் சூழ்நிலை சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்டதில் அந்தச் சிறுமியின் மரணத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்ட நபரே காரணம் என்பதில் நீதிமன்றம் மனநிறைவு கொள்வதாக நீதிபதி எவாவானி குறிப்பிட்டார்.








