May 25, 2026
Thisaigal NewsYouTube
கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்
தற்போதைய செய்திகள்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

Share:

அண்டை நாடான சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றானது அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மலேசியாவில் அதன் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதுடன், தொடர்ந்து குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மே 16-ஆம் தேதியுடன் முடிவுற்ற, 2026 ஆம் ஆண்டிற்கான 19-வது தொற்றியல் வாரத் தரவுகளை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 9 ஆயிரத்து 682 தொற்று சம்பவங்கள் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதேவேளையில், வாரந்தோறும் ஒப்பிடுகையில், 0.7 விழுக்காடு அல்லது 575 தொற்று சம்பவங்கள், சிறிய அளவில் அதிகரித்திருந்தாலும் கூட, நிலைமையானது முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பதிவாகியுள்ள பெரும்பாலான தொற்று சம்பவங்களில், மருத்துவமனை அனுமதியே தேவையில்லை என்றும், 2026- ஆண்டு முழுவதும் கோவிட்-19 காரணமாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

28 மலேசிய ஜிஎஸ்எஃப் 2.0 செயற்பாட்டாளர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

28 மலேசிய ஜிஎஸ்எஃப் 2.0 செயற்பாட்டாளர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பினர்