Sep 26, 2026
Thisaigal NewsYouTube
திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி
தற்போதைய செய்திகள்

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

Share:

திரங்காணு – பகாங் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் கிணறு தளம் ஒன்றில், நேற்று நடைபெற்ற அவசரகால வெளியேற்றப் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

நேற்று மதியம் சுமார் 12 மணியளவில், மூடப்பட்ட உயிர்காப்புப் படகு ஒன்றில், நான்கு பேரும் அவசரகால வெளியேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அதைத் தாங்கியிருந்த கம்பிகள் திடீரென அறுந்து, விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவத்தில் நான்கு பேரும் படுகாயமடைந்த நிலையில், மீட்புக் குழுவினரால் கோல திரங்காணுவிலுள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

என்றாலும், அவர்களில் மூன்று பேர் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்படும் போதே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுதினர்.

மேலும், காயமடைந்த 36 வயதான ஆடவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News