Jun 6, 2026
Thisaigal NewsYouTube
28 மலேசிய ஜிஎஸ்எஃப் 2.0 செயற்பாட்டாளர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
தற்போதைய செய்திகள்

28 மலேசிய ஜிஎஸ்எஃப் 2.0 செயற்பாட்டாளர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

Share:

காசாவுக்கான மனிதநேய உதவிகளை மேற்கொள்ளும் குளோபல் சுமூத் புளோட்டிலா 2.0 பயணத்தின் போது, இஸ்ரேலியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட 28 மலேசியர்களும், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

அவர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி, சுமார் 2.20 மணியளவில், சுமூத் புளோட்டிலா கட்டளை மையமான எஸ்என்சிசியின் தலைமை இயக்குநர் சானி அரபி அப்துல் அலிம் அரபி உடன், இஸ்தான்புல் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

இந்நிலையில், துபாய் வழியாகப் பயணித்த அவ்விமானம், நேற்று இரவு 9.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் டெர்மினல் 1-ஐ வந்தடைந்தது.

அவர்களை வரவேற்க சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சிக் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் தர்மிசி சுலைமான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

அதேவேளையில், 100-க்கும் மேற்பட்ட உறவினர்களும், ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

உறவினர்கள் சிலர், செயற்பாட்டாளர்களைக் கண்ணீருடன் வரவேற்ற காட்சி, அங்கிருந்தவர்களையும் கலங்க வைத்தது.

இதனிடையே,ரஸ்மான் மாட் அலி என்ற செயற்பாட்டாளர் இஸ்தான்புல் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இஸ்ரேலிய படையினர் தாக்கியதில் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு