கோலாலம்பூர், அக்டோபர்.08-
இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட 23 மலேசிய தன்னார்வலர்களும், இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
குளோபல் சுமுட் ஃபுளொடில்லா மனிதாபிமானப் பணியை மேற்கொள்ள, அவர்கள் அனைவரும் காஸாவிற்குச் சென்று கொண்டிருந்த போது, சர்வதேச கடல் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய எல்லைக்குள் அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக, சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினர் கூறி வரும் கருத்துகளை, பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் நேற்று இரவு கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முகமட் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.








