Nov 27, 2025
Thisaigal NewsYouTube
உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர் விண்ணப்பம் நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர் விண்ணப்பம் நிராகரிப்பு

Share:

ஷா ஆலாம், நவம்பர்.27-

மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் Palapes பயிற்சி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த மாணவனின் முதலாவது சவப்பிரிசோதனை அறிக்கையைக் கோரி, குடும்பத்தினர் செய்து கொண்ட விண்ணப்பத்தை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்து விட்டது.

ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் என்ற அந்த மாணவனின் குடும்பத்தினர் தொடுத்துள்ள வழக்கு விசாரணை இன்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சட்டத்துறை தலைவரின் இந்த முடிவு குறித்தும், சம்பந்தப்பட்ட குடும்பத்தின் ஏமாற்றத்தையும் மாணவனின் குடும்பம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ நரன் சிங் கேள்வி எழுப்பினார்.

முதலாவது சவப் பரிசோதனை அறிக்கையை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதில் போலீஸ் விசாரணை அதிகாரிக்கு எந்தவோர் ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சட்டத்துறை அலுவலகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார். அதன் அடிப்படையிலேயே இந்த விண்ணப்பம் செய்யப்பட்டதாக வழக்கறிஞர் நரன் சிங் தெரிவித்தார்.

மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரின் சடலத்தைத் தோண்டி, இரண்டாவது சவப் பரிசோதனை செய்வதற்கு மாணவனின் தாயார் Ummu Kaiman Bee Daulatgun செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related News