பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.14-
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இன்று காலை 9 மணியளவில் மாணவன் ஒருவன், மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததற்கு அந்த மாணவனின் காதலை, அந்த மாணவி நிராகரித்ததே காரணமாகும் என்று கூறப்படுகிறது.
அந்த மாணவனின் காதலைப் புரிந்து கொள்ள முடியாமல் நிராகரித்ததே அந்த மாணவன் இத்தகைய கொடூரச் செயலைப் புரிவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று அந்த மாணவிக்கு நெருக்கமான தோழிகள் கூறியதாக சீனப் பத்திரிக்கை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த மாணவன், சம்பந்தப்பட்ட மாணவியிடம் காதலை வெளிப்படுத்திய போது, அதனை அவர் முற்றாக நிராகரித்து விட்டதைத் தொடர்ந்து அந்த மாணவன் விரக்தியுடன் காணப்பட்டான் என்று உயிரிழந்த மாணவியின் உற்றத் தோழிகள் சிலரை சீனப் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்ட போது, அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர் என்று அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.








