ஜெர்தே, நவம்பர்.04-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 15 வயது மாணவர் ஒருவரை, பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆசிரியர் ஒருவருக்கு ஜெர்தே செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 10 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் அந்த ஆசிரியருக்கு 6 பிரம்படித் தண்டனை விதிக்க தீர்ப்பு அளித்தது.
48 வயது அனுவார் யுசோஃப் என்ற அந்த ஆசிரியருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. தனக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளிலும் ஏற்புடைய சந்தேகங்களை எழுப்ப எதிர்தரப்பு வழக்கறிஞர் தவறிவிட்டார் என்று நீதிபதி அஹ்மாட் ஃபாட்லி மாஹ்மூட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் தேதி திரெங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் தீவில் உள்ள ரிசோர்ட்டில் அந்த ஆசிரியர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








