Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பெண் அரசு ஊழியரின் கணவருடன் ஓரினப்புணச்சி, கார் ஓட்டுநர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெண் அரசு ஊழியரின் கணவருடன் ஓரினப்புணச்சி, கார் ஓட்டுநர் கைது

மலாக்கா, டிச.5-


அரசாங்க அதிகாரியான பெண் ஒருவருக்கு தனிப்பட்ட கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் 32 வயது நபர், அந்தப் பெண்ணின் கணவருடன் இயற்கைக்கு மாறாக ஓரினப்புணர்ச்சி கொண்டதாக மலாக்கா, ஆயர் குரோ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவல் அனுமதி இன்று பெறப்பட்டது.

அந்த கார் ஓட்டுநர், மாஜிஸ்திரேட் நோர் சயாலியாத்தி முகமட் சோப்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தன்மை விளக்கப்பட்டு, தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டது.

அரசாங்க பெண் அதிகாரியின் கணவரான மலாக்கா மாநில சமய அதிகாரியாக பணியாற்றி வரும் 47 வயது நபரை, 32 வயது கார் ஓட்டுநர் கடந்த ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் மலாக்கா, ஜாசின், மெர்லிமாவில் உள்ள தனது பெண் முதலாளியின் வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவ்விரு ஆடவர்களும் ஓரினப்புணர்ச்சி புரியும் காட்சி, வீடியோ காணொளியை போலீசார் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த பெண் அதிகாரியின் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →