Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சாலை வளைவில் மோதி, போக்குவரத்து போலீஸ்காரர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சாலை வளைவில் மோதி, போக்குவரத்து போலீஸ்காரர் மரணம்

கோலாலம்பூர், ஜூன்.28-

கோலாலம்பூரில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்.

24 வயது லான்ஸ் கோப்ரல் முகமட் அமிருல் அய்மான் என்ற அந்த போலீஸ்காரர், அதிகாலை 4.30 மணியளவில் ஜாலான் துன் ராஸாக்கிலிருந்து செலாயாங்கை நோக்கி, ஜாலான் கூச்சிங் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவரின் மோட்டார் சைக்கிள் சாலை வளைவில் உள்ள இரும்புத் தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.

இதில் கடும் காயங்களுக்கு ஆளாகிய அந்த போலீஸ்காரர், சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த போலீஸ்காரின் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர், வேகக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் சொற்ப காயங்களுக்கு ஆளானதாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் ஏசிபி ஸம்ஸுரி முகமட் இசா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →