Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மக்கள் சொந்த வீடு பெறுவதை ஊக்குவிக்கும்
தற்போதைய செய்திகள்

மக்கள் சொந்த வீடு பெறுவதை ஊக்குவிக்கும்

Share:

முதலாவது சொந்த வீட்டை வாங்குபவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் முத்திரை வரி விலக்களிப்பு தொடரும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைத் தொடர்ந்து, சொந்த வீட்டைப் பெறும் மக்களின் விருப்பத்திற்கு ஓர் ஊக்குவிப்பாக இது அமையும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்தத் திட்டமானது, நாட்டில் குறிப்பாகச் சிலாங்கூர் மாநிலத்தில் முதல் வீட்டை அல்லது புதிதாக வீட்டை வாங்க விரும்புவோருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் அதே வேளையில், இந்த வரி விலக்கின் மூலம் அவர்களால் எளிதாகவும் வீடுகளை வாங்க முடியும் என்று அனைத்துலக இஸ்லாமிய பல்க்லைக்கழகத்தில் சிலாங்கூர் மாநில நிலையிலான 2023 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

Related News