கோலாலம்பூர், அக்டோபர்.23-
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் மது வழங்குவதைத் தடை செய்ய வேண்டும் என்று பாஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதை, ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசிய லிம் லிப் எங், எதிர்க்கட்சியான பாஸ் முன்வைத்துள்ள இந்த “ஜனநாயகமற்ற” முன்மொழிவைச் சாடியுள்ளார்.
மது அருந்துவது என்பது முஸ்லிமல்லாதோரின் தனியுரிமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட அரபு நாடுகளின் விமான நிறுவனங்களான, Emirates, Etihad Airways, Gulf Air ஆகியவை கூட, விமானங்களில் மது வழங்குவதை கிம் லிப் எங் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதே வேளையில், பாஸ் கட்சிக்கு மது வழங்குவது பிடிக்கவில்லை என்றால், பாஸ் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் தனி விமானச் சேவையைத் தொடங்கட்டும் என்றும் லிம் லிப் எங் நையாண்டியாகக் கூறியுள்ளார்.








