Feb 14, 2026
Thisaigal NewsYouTube
சீனப் புத்தாண்டு விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம்: கிள்ளான் ஜெயண்ட் பேரங்காடியில் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் ஆய்வு
தற்போதைய செய்திகள்

சீனப் புத்தாண்டு விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம்: கிள்ளான் ஜெயண்ட் பேரங்காடியில் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் ஆய்வு

Share:

கிள்ளான், பிப்ரவரி.14-

சீனப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், சிலாங்கூர் மாநில பயனீட்டாளர்கள் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஹஜி ரிஸாம் இஸாம் ஹஜி இஸ்மாயில் நேற்று கிள்ளான் புக்கிட் திங்கி ஜெயண்ட் பேரங்காடியில் நேரடி ஆய்வை மேற்கொண்டார்.

சீனப் புத்தாண்டு விடுமுறை காலத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 21 வரை ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு 15 வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கு 'சீனப் புத்தாண்டு கால உச்சவரம்பு விலைத் திட்டம்' அமல்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ரிஸாம் குறிப்பிட்டார்.

அதே வேளையில் கிள்ளான் புக்கிட் திங்கி, ஜெயண்ட் பேரங்காடியில் தாம் மேற்கொண்ட ஆய்வில் பொருட்களிள் விலை, வழக்கமான விலையை விட குறைவாக இருப்பதைக் காண முடிவதாக டத்தோ ரிஸாம் தெரிவித்தார்.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 'ரஹ்மா மடானி” விற்பனைத் திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் 182 இடங்களில் 30 சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதே வேளையில் சிலாங்கூர் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு இருப்பதாகவும், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் டத்தோ ரிஸாம் உறுதி அளித்தார்.

கிள்ளான் புக்கிட் திங்கி ஜெயண்ட் பேரங்காடியின் கிடங்கு நிர்வாகி சரவணகுமார் மஹாதேவா கூறுகையில், அறிவிக்கப்பட்ட விலைக் கட்டுப்படுத்தப்பட்ட 15 பொருட்களின் விலையை விட 8 பொருட்களின் விலை ஜெயண்ட் பேரங்காடியில் குறைவாக உள்ளதாக திசைகளுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

ஜெயிண்ட் பேரங்காடியில் டத்தோ ரிஸாமினால் அறிவிக்கப்பட்ட விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியல் மற்றும் அந்த பேரங்காடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது சிலாங்கூர் மாநில உள்நாட்டு வணிகம் மற்றும் பயனீட்டாளர் அமைச்சின் இயக்குநர் முகமது ஹனிப் அசாரியும் உடனிருந்தார். ஜெயண்ட் பேரங்காடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பெரும்பாலான பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு விலையை விடக் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுவதைக் கண்டு அவர் திருப்தி தெரிவித்தார்.

Related News

வாடிக்கையாளர்கள் வருகை குறைவு: அன்புக்குரியவர் தின விற்பனையைப் பாதித்த சீனப் புத்தாண்டு விடுமுறை

வாடிக்கையாளர்கள் வருகை குறைவு: அன்புக்குரியவர் தின விற்பனையைப் பாதித்த சீனப் புத்தாண்டு விடுமுறை

எல்ஆர்டி3 தொடக்கத்தை விரைவுபடுத்த போக்குவரத்து அமைச்சகம் முயற்சி

எல்ஆர்டி3 தொடக்கத்தை விரைவுபடுத்த போக்குவரத்து அமைச்சகம் முயற்சி

கோலாலம்பூரில் போலி மருத்துவர்களாக வலம் வந்த 6 பேர் உட்பட 18 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூரில் போலி மருத்துவர்களாக வலம் வந்த 6 பேர் உட்பட 18 வெளிநாட்டினர் கைது

சீனப் புத்தாண்டு விடுமுறை: முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சீனப் புத்தாண்டு விடுமுறை: முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆயுதப்படை கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக நீக்கப்படும்: டத்தோ மாலிக் ரஸாக் சுலைமான் அறிவிப்பு

ஆயுதப்படை கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக நீக்கப்படும்: டத்தோ மாலிக் ரஸாக் சுலைமான் அறிவிப்பு

கெப்போங் தம்பதி மரணம்: பெண்ணின் உடலில் 89 கத்திக் குத்துக் காயங்கள் இருப்பது உறுதி

கெப்போங் தம்பதி மரணம்: பெண்ணின் உடலில் 89 கத்திக் குத்துக் காயங்கள் இருப்பது உறுதி