ரவாங், ஆகஸ்ட்.10-
சிலாங்கூர், தாமான் ஏகோ ரிம்பா வனப் பூங்காவில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்தவர்களில் ஒரு 19 வயது இந்தோனேசிய இளைஞருக்குத் தோள் பட்டையிலும் விலா எலும்புகளிலும் காயம் ஏற்பட்டது. மற்றொரு 30 வயது மதிக்கத்தக்க நபருக்குக் காலிலும் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது என சிலாங்கூர் மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு - மீட்புப் படையினர், இருவரையும் மீட்டு செலாயாங் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.








