கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரையில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அதிக குற்றச்செயல்களில் லோவ் ஸ்கேம் எனப்படும் இணைய காதல் மோசடிகள் முன்னணியில் இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.
இணையத்தின் வாயிலாக தொடர்பு கொண்டு, வசீகர வார்த்தைகளினால் காதல் மொழிபேசி, இதயங்களை வருடும் இந்த நூதன லோவ் ஸ்கேம் மோசடிகளினால் 36 கோடியே 50 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இடைக்கால போலீஸ் துணை இயக்குநர் முகமது யூசுப் ஜான் முகமட் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட 7,286 லோவ் ஸ்கேம் மோசடி தொடர்பான குற்றச்செயல்களில் ஏமாந்து பணம் இழந்தவர்களில் 82.5 விழுக்காட்டினர் பெண்கள் ஆவார்.
குறிப்பாக, தனித்து வாழும் தாய்மார்கள், தனிமையில் உள்ள பெண்கள், கணவனை இழந்த வசதி படைத்த மூதாட்டிகள், திருமணம் ஆகாத வயது முதிர்ந்த பெண்கள் ஆகியோரை இலக்காக கொண்டு, அன்புக்காக ஏங்கும் அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி, மோசடி கும்பல்களால் இந்த வசீகர காதல் வலை, கனகச்சிதமாக பின்னப்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் பறிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று முகமட் யூசுப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


