ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்து உராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சுடன் தாம் கலந்தாலோசிக்க இருப்பதாக பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேசத்திற்கான அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.
இந்தப் பரிந்துரை குறித்து தாம் அறிந்திருப்பதாகவும், அதன் முக்கியத்துவத்தை நிராகரிக்கவில்லை என்றும் கூறிய டாக்டர் சலிஹா, இதனை மிக ஆழமாக செம்மைப்படுத்த வேண்டும் என்றும் சொன்னார்.
ஊராட்சி மன்றம், குறிப்பாக கோலாலம்பூரில் அத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என டிஏபி கட்சி முன்மொழிந்துள்ள நிலையில், பலரது தரப்பினரின் விமர்சனத்திற்கு அந்தப் பரிந்துரை இலக்கானது.








