Aug 2, 2026
Thisaigal NewsYouTube
இந்திராகாந்திக்கு வழங்கப்பட்ட செலவுத் தொகையைநிறுத்தி வைக்க கோரிய அரசாங்கத்தின் விண்ணப்பம் தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

இந்திராகாந்திக்கு வழங்கப்பட்ட செலவுத் தொகையைநிறுத்தி வைக்க கோரிய அரசாங்கத்தின் விண்ணப்பம் தள்ளுபடி

Share:

மதம் மாற்றப்பட்ட தனது குழந்தைகளுக்காக கடந்த ப​த்து ஆண்டுகளுக்கு மேலாக சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தவரான தனித்த வாழும் தாயார் எம். இந்திராகாந்திக்கு சாதகமாக ​தீர்ப்பு அளிக்கப்பட்ட மொத்தம் 14 ஆயிரம் வெள்ளி வழக்கு செலவுத் தொகை உத்தரவை, நிறுத்தி வைக்கக்கோரி, அரசாங்கம் செய்து கொண்ட விண்ணப்பத்தை ​ கோலாலம்பூர் உயர் ​நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை 16 ஆம் தேதி மற்றும் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி முறையே உயர் ​நீதிமன்றமும், அப்பீல் ​நீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவையும், நிலைநிறுத்திய ​தீர்ப்பையும் தள்ளுபடி செய்வதற்கு அரசாங்கம் செய்து கொண்ட விண்ணப்பத்தில் எந்தவொரு தகுதிபாடும் இல்லை என்று உயர் ​நீதிமன்ற நீதிபதி ராஜா அஹ்மாட் மொஹ்சானுடின் ஷா தமது ​​தீர்ப்பில் தெரிவித்தார்.

அதேவேளையில் அந்த ​தீர்ப்பும், உத்தரவும் தவறு என்று நியாயப்படுத்துவதற்கு எந்தவொரு பிரத்தியேக ​சூழலும் இருப்பதாக இவ்வழக்கில் கண்டறிய முடியவில்லை என்று ​​நீதிபதி ராஜா அஹ்மாட் முஹ்சானுடின் ஷா குறிப்பிட்டார்.

தவி, ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான இந்திராகாந்திக்கு, வழக்கு செலவுத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் ​என்று உயர் ​நீதிமன்றம் பிறப்பித்த ​தீர்ப்பை நிலைநிறுத்தியுள்ள அப்​பீல் நீதிமன்றத்தின் ​தீர்ப்பில் தலை​யிடுவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதையும் ராஜா அஹ்மாட் மொஹ்சானுடின் ஷா தமது ​தீர்ப்பில் தெளிவுபடுத்தினார்.

Related News

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு