கோலாலம்பூர், ஜனவரி.16-
மலேசியாவில் 'பில்லி சூனியம்' அல்லது 'கண் கட்டு வித்தை' போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தி பணத்தைத் திருடி வந்த ஐந்து ஈரானிய பிரஜைகளைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர். இவர்கள் சுற்றுலாப் பயணிகள் போல வேடமணிந்து, மளிகைக் கடைகள் மற்றும் பணப் பரிமாற்ற நிலையங்களை இலக்கு வைத்துள்ளனர். தங்களுக்கு உள்ளூர் ரூபாய் நோட்டுகள் பற்றித் தெரியாது எனக் கூறி, கடைக்காரர்களிடம் ரூபாய் நோட்டுகளைக் காண்பிக்கும்படி கேட்டுள்ளனர்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் 'கண் கட்டு வித்தை' போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தி, கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுக் கட்டாகப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பிச் செல்வதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








