லங்காவி, நவம்பர்.03-
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், தனது தொகுதி மக்களுக்காக ஒரு மில்லியன் ரிங்கிட்டைத் திரட்டி சாதனைப் படைத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதர் மலேசியா 2025 எனும் Ironman Malaysia போட்டியின் மூலம் அந்த இளம் எம்.பி. இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டியுள்ளார்.
முன்னாள் மூடா கட்சியின் தலைவரும், முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சருமான சைட் சாடிக், இரும்பு மனிதர் போட்டியில் தாம் ஏற்ற சவாலை 12 மணி நேரம் 22 நிமிடங்கள் 18 வினாடிகளில் முடித்தார்.
3.8 கிலோமீட்டர் நீச்சல், 180 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டம், 42.2 கிலோமீட்டர் ஓட்டம் ஆகியவற்றை சைட் சாடிக், 12 மணி நேரம் 11 நிமிடங்கள் 18 வினாடிகளில் முடித்தார்.
உள்ளூர் ஃபேஷன் நிறுவனமான Prima Valet, நிர்ணயித்து இருந்த தேவைகளை சைட் சாடிக் பூர்த்தி செய்ததால் அவர் ஊக்கத் தொகையைப் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.








