கோலாலம்பூர், செப்டம்பர்.15-
கூட்டு விசா விலக்களிப்பு கொள்கை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் இரு வழி சுற்றுலா தூண்டுதலுக்கு முக்கிய காரணியாக உள்ளது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தவிர மலேசியாவில் பெரியளவில் சீனர்களின் எண்ணிக்கை, உட்பட நாட்டின் இன பன்முகத்தன்மை, சீன நாட்டுப் பிரஜைகளை அதிகம் ஈர்க்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மலேசியா ஒரு தனித்துவமான மற்றும் அழகான நாடு என்று வர்ணித்த பிரதமர், நெருக்கமான கலாச்சார உறவுகள், துடிப்புமிக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நட்பான, கவர்ச்சிமிகுந்த சூழலை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.








